இலங்கை வீரர்கள் தமது வீடுகளிலே பயிற்சி மேற்கொள்ளவும், அதனை கண்காணிக்கவும் நடவடிக்கை
உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இலங்கை மக்கள் முகம் கொடுத்துள்ள நிலைமை தொடர்பில் தமது வருத்தத்தை தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி அர்தர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்துடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் போட்டிகள் அற்ற காலப்பகுதியில் இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தமது உடற் தகுதிகளை சிறந்த நிலையில் பேணுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்கள் தமது வீடுகளிலேயே பயிற்சிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மிக்கி அர்தர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் கிரிக்கட் உள்ளிட்;ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்போது நிறுத்தப்ப்பட்டுள்ள போதிலும் அடுத்த வருடம் இலங்கை கிரிக்கட் அணி முகம் கொடுக்கவுள்ள போட்டிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி அர்தர் (ஆiஉமநல யுசவாரச) குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment