தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்
ஊரடங்கு சட்டம் நாளை முதல் தளர்த்தப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவை மற்றும் தொழில் நிமித்தம் இருப்பிடத்தில் இருந்து வெளியேறுபவர்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
Post a Comment