Header Ads



தேர்தலை தள்ளிப்போட ஆணைக்குழுவிற்கு, எந்த அதிகாரமும் இல்லை. - பந்துல

(ஆர்.யசி)

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முற்றுமுழுதாக நீக்கப்பட்ட பின்னரே பொதுத் தேர்தலை நடத்துவோம் என்கிறது அரசாங்கம். தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுரை என்னவோ அதனை பின்பற்றி தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறுகின்றது.

தேர்தல் திகதியை அறிவிக்குமாறு பிரதமர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கோரியுள்ள நிலையிலும், தேர்தலை நடத்த வேண்டாம் என எதிர்கட்சிகள் கூறி வருகின்ற நிலையிலும் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவிய போதே  அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கால வரையறையின்றி தேர்தலை தள்ளிப்போட முடியாது. இம்மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்ற வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் விடப்பட்ட நிலையில் குறித்த காலத்தில் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

ஆகவே கால தாமதம் ஏற்பட்டாலும் அடுத்ததாக தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்க வேண்டும். அவ்வாறு தேர்தல் திகதியை அறிவிக்காது தேர்தலை தள்ளிப்போட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே தேர்தல்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை கூடி இது குறித்த தீர்மானம் ஒன்றினை அறிவிக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இந்த நெருக்கடி நிலையிலும் தேர்தலை நடத்தி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. தேர்தல் நடத்தப்பட வேண்டும் ஆனால் மக்களை நெருக்கடிக்குள் தள்ளி தேர்தலை  நடத்த அரசாங்கம் ஒருபோதும் நினைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் முற்றாக  நாட்டில் தடுக்கப்பட்ட பின்னர் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்கப்படும்.

மேலும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துக்கொண்டு நாட்டினை முடக்கத்தில் வைத்திருக்க முடியாது. தொழில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதரத்தை பலபடுத்த வேண்டும். அதற்கான மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டும். மக்களை வீடுகளுக்கும் வைத்திருப்பதால் மக்களின் வாழ்வாதாரமே முற்றுமுழுதாக பாதிக்கப்படும். எனவே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றே இவ்வாறான தீர்மானங்களை நாம் முன்னெடுக்கின்றோம் என்றார். 

1 comment:

  1. 2500 மதிப்புள்ள பொருளாதார நிபுணர் தற்போது தேர்தல் சட்டங்கள்,அதுபற்றிய நிபுணத்துவம் சார்ந்த விடயங்களை பொதுமக்களுக்கு விளக்குகின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.