' சாதாரண பரீட்சை பெறுபேற்றை இன்றிலிருந்து ஒன்லைன் முறையில்'
இந்த முறை சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு ஒன்லைன் (Online) முறையில் அனுப்புவதற்கு கல்வி அமைச்சினால் பரீட்சைத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியதன்படி அனைத்து மாகாண மற்றும் கல்வி கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதற்குரிய User Name பயனர்பெயர் மற்றும் Password கடவுச்சொல்லை பெற்றுக்கொடுக்கும் அங்குராரப்பண வைபவம் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமையில் பரீட்சைத் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்றது.
நாட்டில் தற்போது தோன்றியுள்ள சமகால நிலவரத்தில் அனைத்து சவால்களுக்கும் எவ்வித பயமுமின்றி முகம் கொடுத்து இந்தப் பரீட்சைப் பெறுபேற்றை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சித்த பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்து பணியாளர் குழுவினருக்கும் அதற்கு தலைமை வகித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் அவர்களுக்கும் கல்வி அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.donets.lk ன்பதில் நுழைந்து மாணவர்களுக்கு தமது பெறுபேற்றை தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் இதற்கு முன்னான சந்தர்ப்பங்களில் தபால் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட பாடசாலை பரீட்சை பெறுபேற்று அட்டவணைகளை இன்று தொடக்கம் இந்த இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment