Header Ads



இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானம்

(ஆர்.யசி)

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும் வேளைகளில் இதுவரை காலமாக இருந்த நடைமுறை இல்லாது, இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அவ்வாறான இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ரொமேஷ் பதிரன இது குறித்து கூறுகையில்,

இப்போதுள்ள நிலைமையில் மக்கள் தமது வெளிநாட்டு பயணங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது. எனினும் இன்னும் சில காலங்களில் மீண்டும் நாடும் உலகமும் வழமைக்கு திரும்பும் என்பதில் சந்தேகமில்லை. அவ்வறு இருக்கையில் ஏற்கனவே எமது அரசாங்கம் தீர்மானம் எடுத்தததற்கு அமைய இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை மக்களின் பயன்பாட்டில் கொண்டுவர  ஆலோசிக்கப்பட்டது. அமைச்சர் சமல் ராஜபக் ஷ இது குறித்து ஏற்கனவே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் ஒன்றிணைப்பில் இவ்வாறான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை பத்திரம் வழங்கப்பட்டது. அது குறித்து அமைச்சரவையில் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே விரைவில் இலத்திரனியல் கடவுசீட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் கொண்டவந்து மக்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

No comments

Powered by Blogger.