பிரதமர் மஹிந்தவுக்கு, மஹிந்த தேசப்பிரிய அனுப்பியுள்ள கடிதம்
நாட்டின் தற்போதைய நிலைமையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறிமுறையை செற்படுத்த விசேட திட்டம் ஒன்று அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இன்று (05) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போதைய சூழலில் தமக்கான பிரசார நடவடிக்கையாக நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் மற்றும் கள அலுவலர்கள் பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
ஒரு சில அரசியல்வாதிகள் இந்த சந்தர்ப்பதில் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதை தடுத்து நிறுத்துமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அந்த கடிதத்தனினூடாக பிரதமரை கேட்டுள்ளார்.
Post a Comment