Header Ads



ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், சுகாதார சேவையினர், நாட்டு மக்களுக்காகவும் துஆ பிராத்தனை


- யு.எல்.எம். றியாஸ்  -

தற்போது நாட்டில் நிலவிவரும் கொரனா நோய்த்தொற்றில் இருந்து நாடடையும்  நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு இன்று -06- சம்மாந்துறையில் விசேட துவாப்பிராத்தனை ஒன்று இடம்பெற்றது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை,மஜ்லிஸ் அஸ்ஸூரா, ஜம்மியத்துல் உலமா சபை ஆகிய முச் சபைகளின்  ஏற்பாட்டில் சம்மாந்துறை ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, ,பிரதமர் மகிந்த ராஜபக்ச  , முப்படையினர்,சுகாதார சேவைப்பிரிவினர்கள் ஆகியோர் ஆற்றிவரும் மகத்தான சேவைக்காகவேண்டி   விசேட துவா பிராத்தனை இடம்பெற்றது.

சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி எம்.ரீ . எம். பஸீல் விசேட துவாப்பிராத்தனை செய்தார்.

இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா,பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட், சம்மாந்துறை பொலிஸ் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 



1 comment:

  1. A good example. I hope that some idiot would not say this as a Bida.. Now, definition of Bida needs some more insights.

    ReplyDelete

Powered by Blogger.