மகிழ்ச்சியாக வாழ இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்தேன் - குழந்தைகளை இழந்துவிட்டேன்இ

கிழக்கு லண்டனிலுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த நிஷாந்தனி குமார் (35), ஞாயிற்றுக்கிழமை மதியம் குளியலறையிலிருக்கும்போது, தன் குழந்தை வாந்தியெடுக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்திருக்கிறார்.
அங்கு அவர் கண்ட காட்சி அவரை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
படுக்கையறையில், நிஷாந்தனியின் மூத்த மகன் மூன்றரை வயதான நிகிஷ் மற்றும் ஒரு வயதான மகள் பபின்யா இருவரும் இரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்திருக்கிறார்கள்.
அருகில் அவரது கணவர் நிதின் குமார் (40) கையில் ஒரு கத்தியுடன் முழங்காலிட்டு அமர்ந்திருக்கிறார்.
சட்டென தன் பிள்ளைகள் குத்தப்பட்டு கிடக்கிறார்கள் என்ற விடயம் மூளைக்கு உறைக்க, என்ன செய்தீர்கள் என் குழந்தைகளை, என்ன நடந்தது, என வீறிட்டு அலறியபடி சமையலறைக்கு ஓடியிருக்கிறார்.
பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்துவந்து, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் கிடந்த மகனின் இரத்தப்போக்கை நிறுத்த முயன்றிருக்கிறார்.
மகளிடமோ எந்த அசைவும் இல்லை என்பதையும் கவனித்திருக்கிறார் அவர்.
அதற்குள் நிதின் கத்தியுடன் நிஷாவையும் துரத்தத் தொடங்க, கத்தியைத் தட்டிவிட்ட நிஷா, குளியலறைக்குள் ஓடிச்சென்று 999ஐ அழைத்து தன் பிள்ளைகள் குத்தப்பட்டுள்ளார்கள் என்று கூறி ஆம்புலன்சை அனுப்பும்படி கதறியிருக்கிறார்.
மீண்டும் குழந்தைகளைக் காண ஓடோடிச் செல்லும்போது, நிதினும் தன் கழுத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்திருக்கிறார்.
என்னை மன்னித்து விடு, அவர்கள் என்னைக் கொன்றுவிட்டு நம் பிள்ளைகளை ஏதவாது செய்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது என்று ஏதேதோ உளறிக்கொண்டிருந்திருக்கிறார் நிதின்.
மன நலம் பாதிக்கப்பட்டவர் போல், அவர்கள் எப்படி தன்னை பிடிக்கப்போகிறார்கள், குழந்தைகளை காப்பாற்றுவது எப்படி என்றெல்லாம் உளறியபடி மயங்கிச் சரிந்திருக்கிறார் நிதின்.
அவருக்கு ஏதோ மன நலப் பிரச்சினை இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார் நிஷா. நிஷாவுக்கும் நிதினுக்கும் இலங்கையில் வைத்து 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நிதின் 1999இலிருந்தே பிரித்தானியாவில் வசித்து வந்த நிலையில், நிஷா 2015ஆம் ஆண்டுதான் பிரித்தானியா வந்தார்.

இதற்கிடையில், தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டார் என்ற கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், மருத்துவமனையில் இருக்கும் கணவர் எப்படி இருகிறார் என்பதை அறிய தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மூலம் விசாரித்து வருகிறார் நிஷா.
மகிழ்ச்சியாக வாழலாம் என பிரித்தானியாவுக்கு வந்தேன், குழந்தைகளை இழந்துவிட்டேன், ஒருவேளை இனி விதவையாகவும் ஆகிவிடலாம் என கண்ணீர் வடிக்கிறார் நிஷா.
This comment has been removed by the author.
ReplyDelete