Header Ads



மே மாத நடுப்பகுதியில் பொதுத்தேர்தல்: செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். பலமான அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற்றால் மாத்திரமே அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கு மக்களாணை கிடைக்கப்பெறவில்லை ஜனாதிபதி மாத்திரமே, மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முடிந்தளவிற்கு நிறைவேற்றியுள்ளது. பல விடயங்களை செயற்படுத்த இடைக்கால அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் பல தடைகள் ஏற்பட்டன.

இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதியை குறித்தொதுக்கினார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் திகதி குறிப்பிடாமல் பிற்போடப்பட்டுள்ளது.

தற்போது நாடு பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலமான அரசாங்கம் தோற்றம்  பெற்றால் மாத்திரமே நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முடியும். தற்போதைய நிலைமை சீர் செய்யப்பட்டதன் பின்னர் மே மாதம் நடுப்பகுதியில் பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த எதிர்ப்பார்த்துள்ளோம் என்றார்.

1 comment:

  1. ENGALUKKU MEESAI PATTHITHI
    IWANUKKU SURUTTU PATTHAWAIKANUMMAM

    ReplyDelete

Powered by Blogger.