ரணில் வெளியிட்டுள்ள அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை அறிய தற்போது ஆயிரத்திற்கும் குறைவான பரிசோதனைகளே நடத்தப்படுவதாகவும் குறைந்தது தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகளாவது நடத்தும் இலக்கு நோக்கி செல்ல வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்காக நாட்டிற்குள் இருக்கும் வசதிகளை கூடியளவில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் தனியார் துறையினரையும் சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் இரண்டாம் கட்ட பரவல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை நிராகரிக்க முடியாது.
நாட்டில் கொரோனா நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புள்ளிவிபரத்தின் உண்மை தன்மை பற்றி எனக்கு தெரியாது.எனினும் இப்படியான நிலைமையோ அதற்கு அப்பாலான சிரமமான நிலைமையையோ எதிர்நோக்க தயாராக இருக்க வேண்டும்.
இதனால், தென் கொரியா, நியூசிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் கையாண்ட முறைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். பரிசோதனைகளை அதிகரித்து, சமூக இடைவெளியை படிப்படியாக தளர்த்தி, மீண்டும் பொருளாதாரத்தை உயிரூட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment