என் மக கர்ப்பிணியா இருக்கா, எதையும் சாப்பிடல, நோன்பு கஞ்சி கேக்குறா....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
27.04.2020 அன்று ...
வீதியில் எனக்கு தெரிந்த ஹாஜியாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் ஒரு பெண்மணி தலையில் முக்காடிட்டு கையில் ஒரு தூக்கு வாலியுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த பெண்ணை கடக்க முயன்ற போது ,...
அஜரத்துங்க என கூப்பிட்டு நீங்க நோன்பு கஞ்சி சில பேருக்கு கொடுத்ததா சொன்னாங்க.
என் மக மாசமா இருக்கா
எதையும் சாப்பிடல
ஆனா நோன்பு கஞ்சி கேக்குறா என கூறினார்
நானும் சரி எனக்கூறி அவர் கையில் இருந்த தூக்குசட்டியை வாங்கி கொண்டு பள்ளிவாசல் சென்று எனக்கும் முஅத்தினுக்கும் எடுத்து வைத்திருந்த கஞ்சியிலிருந்து கொஞ்சத்தை எடுத்து கொண்டு அந்த பெண்ணை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அந்த பெண் கையில் எதையோ மறைத்து தனது சேலையில் வைத்திருந்தார். நான் தூக்குசட்டியை கையில் கொடுக்கும் போதுதான் அது ஊறுகாய் பாக்கெட் என்பதை பார்த்தேன்.
ஏம்மா வடை எதும் வாங்கலியா என்று எதார்த்தமாக கேட்க
அடக்கி வைத்திருந்த அழுகை அந்த பெண்ணின் கண்ணிலிருந்து மழமழ வென முகத்தில் கொட்டியது.
பதறிப்போய் ஏன் அழுகுறீர்கள் என கேட்டேன்
இந்த பாவி பயல்க செய்த காரியத்தால் ( லாக்டவுண்) வாயும் வயிறுமா இருக்குற என் புள்ளைக்கு ஒருவாய் சோறாக்கி போட வக்கில்லாமல் இருக்கேன் தம்பீ...
என தெருவென்று கூட பார்க்காமல் அழ ஆரம்பித்து விட்டார் அந்த பெண்மணி .
ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.
இஃப்தார் கணத்த இதயத்தோடு கழிந்தது
இது போன்ற உதவி எப்போது தேவை பட்டாலும் என்னை அழையுங்கள் என என்னிடம் கூறிவைத்திருக்கும் ஒரு தனவந்தரை தொடர்பு கொண்டு நிலையை எடுத்து கூறினேன் (அல்லாஹ் அந்த சீதேவிக்கு பரக்கத் செய்வானாக)
வீட்டிற்கு அழைத்து..
25 கிலோ அரிசி பழவகைகள் கொஞ்சம் ஆயில் 2 லிட்டர் சீனி ரவை மைதா தலா ஒரு கிலோ
இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஒப்படைக்க சொன்னார்.
வாகனம் எடுத்து செல்லாததினால் இஷாவிற்கு பிறகு அதை பெற்று உரியவர் வீடுதேடி கொடுத்துவிட்டு வந்தேன்.
அந்த மகிழ்ச்சில் இன்னும் தூக்கம் வரவில்லை...
இப்படி எத்தனையோ குடும்பங்கள் பசி பட்டினியுடன் குழந்தைகளோட துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்
துஆ செய்யுங்கள்
ஏழைகளை இனம்கண்டு உதவுங்கள்
பீர்காஜா
அல்லாஹ் அவருக்கு பரகத் செய்யட்டும்.
ReplyDelete