Header Ads



ஜனாதிபதியின் அறிவுறுத்தல், சர்வதேச கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பணியாளர்

MSC மெக்னிஃபிகா கப்பலில் இருந்த இலங்கை பணியாளரை மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள நபர் பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த MSC மெக்னிஃபிகா என்ற பயணிகள் கப்பலில் சமயல் கலைஞராக பணிப்புரிந்த இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். 

அநுர ஹேரத் என்ற சமயல் கலைஞர் தம்மை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். 

காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் குறித்த கப்பல் இன்று (06) எரிப்பொருள் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடும் சந்தர்ப்பத்தில் குறித்த சமயல் கலைஞரை தரையிறக்க எதிர்பார்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். 

அதனடிப்படையில் குறித்த நபர் மீட்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பூஸ்ஸ கொரோனா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.