கைதுசெய்யப்படும் நபர்களை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தக்கூடாது
கொவிட் - 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தத விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் அண்மையில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தீபிகா உடுகம தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களின் போது, கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கைதுசெய்யப்படும் நபர்களை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
Post a Comment