சீதுவை விசேட இராணுவ, முகாம் தனிமைப்படுத்தப்பட்டது
சீதுவையிலுள்ள விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (25) அதில் பணியாற்றும் இராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த முகாம் இன்று (26) முற்பகல் மூடப்பட்டு, தனிமைப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவை விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டது-COVID19 Positive Case Found-Seedua Army Camp Isolated
குறித்த நபரின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றுபவர் எனவும், அவருக்கு ஏற்கனவே தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த இராணுவ உறுப்பினருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக, சுகதார பரிசோதகர் தெரிவித்தார்.
சீதுவை விசேட இராணுவ முகாம் தனிமைப்படுத்தப்பட்டது-COVID19 Positive Case Found-Seedua Army Camp Isolated
அத்துடன், குறித்த நபருடன் நேரடித் தொடர்புபட்டவர்களையும் தனிமைப்படுத்தலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர், அத்தனகலை, பெம்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அவர் தெரிவித்தார்.
Post a Comment