பாகிஸ்தானியர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - இம்ரான்கான் எச்சரிக்கை
நியூயார்க்கை பார்த்து பாகிஸ்தானியர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் 2,818பேருக்கு கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 41பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், லாகூரில் 1,000படுக்கைகள் கொண்ட கொரோனா தடுப்பு மருத்துவமனையில் பார்வையிட்ட பிரதமர் இம்ரான் கான், கொரோனாவில் இருந்து யாரும் தப்ப முடியும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். நியூயார்க்கை பாருங்கள். பெரும்பாலும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது”.என்று எச்சரித்தார்.
மக்களை காப்பாற்ற பாகிஸ்தான் அரசு முழு முயற்சியுடன் போராடி வருவதாகவும், தெரிவித்தார்.
பாகிஸ்தானில், கொரோனா தொற்றால், ஏப்ரல் 25க்குள் 50,000பேர் பாதிக்கப்படுவர் என்று அஞ்சப்படுகிறது. அதில், 7,000பேர் சராசரியானவர்கள் என்றும், 2,500பேர் தீவிர நோயாளரிகளாக இருக்கலாம் என்றும், 41,000பேரை சிறிய அளவில் பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பாகிஸ்தானில் 154 மாவட்டங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment