Header Ads



மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து, கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும் - ஜனாதிபதி கோட்டாபய

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை படிப்படியாக தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இக்காலப்பகுதியில் நமது சேவை நிலையங்களிற்கு சமூகமளித்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளியில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது பேஸ்புக் வலைத்தளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
  
நாம் பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகளின் மூலமே இந்த முடிவை எடுத்ததோடு பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய  மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையினதும் கடமையாகும். சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைக்கு அமைய செயற்படுவதன் மூலமே இந்த சவாலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியும் என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என பதிவிட்டுள்ளார்.



No comments

Powered by Blogger.