ஜனாதிபதி நிதியத்தின் வைப்பு மீதி 871 மில்லியனாக அதிகரிப்பு
லங்கா மின்சார தனியார் நிறுவனம் அன்பளிப்பு செய்த 05 மில்லியன் ரூபா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அரச சார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.குணரத்ன தனது சம்பளத்தை சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தார்.
நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 871மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.04.28
Post a Comment