Header Ads



இலங்கையில் 5 நாளில் குணமடைந்த கொரோனா நோயாளி - 14 நாட்கள் வீட்டில் தனிமை

பிலியந்தலை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மீன் வியாபாரி 5 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

33 வயதுடைய இந்த நபர் கெரோனா தொற்குள்ளாகியதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் இருவருக்கு அருகில் நெருக்கமாக செயற்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது.

குறித்த மீன் வியாபாரி 5 நாட்களில் குணமடைந்த போதிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த நபர் 5 நாட்களில் வீடு திரும்பியவுடன் அவரது வீட்டு அயலவர்கள் மத்தியில் கொரோனா அச்ச நிலை இல்லாமல் போயுள்ளது.

எனினும் அது தொடர்பில் எப்போதும் அவதானத்துடனேயே செயற்பட வேண்டும் என பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தனிமைப்படுத்தல் இன்னும் இலகுவாக்கப்பட்டால் மக்கள் உளவியல் ரீதியில் தாக்கமடைதல் குறைவடைந்து தொற்றை எதிர் கொள்ளும் துணிச்சல் அதிகரிக்கும். அத்துடன் தனிமைப்படுத்தலுக்காக மிக அதிக தூரம் கொண்டு செல்வதும் ஒரு வேளை அவர்கள் மத்தியிற் பீதியை அதிகரிக்கலாம். எனவே ஓரளவாவது அண்மிய இடங்களில் தனிமைப்படுதல் முன்னேற்றத்தைக் கொடுக்கலாம் என்பது எனது கணிப்பு

    ReplyDelete

Powered by Blogger.