Header Ads



வெளிநாடுகளிலுள்ள 27.000 இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம் - அழைத்துவரவும் நடவடிக்கை

(நா.தனுஜா)

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களில் வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ளவர்களை  அடையாளங்கண்டு, அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டில் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தனிமைப்படுத்தல் வசதிகளையும் கருத்திற்கொண்டு, மிகவும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுள்ள வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அடையாளம் கண்டு, அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பு மற்றும் ஏனைய வழிமுறைகளினூடாக, இன்றுவரை வெளிநாடுகளிலுள்ள 27.000 இற்கும் மேற்பட்ட  இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். இவர்களுள் 17,000 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தங்கி வாழ்வோர், 6,000 மாணவர்கள் மற்றும் சுமார் 3,000 குறுகிய கால வீசாவையுடையவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவர்.

மருத்துவத்துறையின் கண்ணோட்டத்தில் குறிப்பிட்ட பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் தெற்காசியாவில் அரச பயிற்சிகளைப் பெற்றுக்கொள்பவர்களை நாட்டிற்கு மீள அழைத்துவருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

ஏனைய இடங்களில் அதிகரித்து வரும் இதேபோன்ற சூழ்நிலைகளை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நாட்டிற்கு மீள அழைத்து வரப்படுவதற்கான தீர்மானம் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து  கொள்கை வகுப்பாளர்களின் பரிந்துரைகள் பெறப்படும்.

அதேவேளை, இலங்கையின் 67 தூதரகங்களின் வலையமைப்பானது, தேவைகளையுடைய வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்கி, வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. உள்நாட்டிலுள்ள இலங்கைச் சமூகம் மற்றும் மத அமைப்புக்களின் உதவியுடன், தேவையான இடங்களில் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குவதோடு, வீசாக்களை நீடிப்பதற்கும், நாடு திரும்புவதனை  வங்கிகளினூடாக நிதிப் பரிமாற்றம் செய்வதனை இயலுமாக்குவதற்கும், கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நல்வாழ்வினை உறுதி செய்வதற்கும் தூதரகங்கள் உதவுகின்றன.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் பெரும்பாலும் எதிர்கொள்ளப்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு தூதரகங்களால் இயலுமாக இருக்கிறது.  தூதரகங்களின் முயற்சிகளை மேற்கொள்வதற்குஇ இடம்பெயர்வுகளுக்கான சர்வதேச அமைப்புஇ கரிட்டாஸ் மற்றும் செம்பிறை சங்கங்கள் போன்ற சர்வதேச அமைப்புக்களால் வழங்கப்படும் உதவிகள் உறுதுணையாக உள்ளது.

No comments

Powered by Blogger.