அக்குரணையில் சுய தனிமைப்படுத்தலை முறையாக கடைப்பிடிக்காத 144 பேர் இன்று புனாணைக்கு அனுப்பி வைப்பு
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைகளை முறையாக கடைப்பிடிக்காத அக்குரணை பகுதியை சேர்ந்த 144 பேர் இன்று (05) அதிகாலை புனாணை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தாலும், மக்களின் கவனயினத்தால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மீறி செயற்படுவோரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment