Header Ads



வங்காளதேசத்தில் இப்தாருக்கு தடை - பள்ளிவாசல்களில் 12 பேர் தொழுவதற்கு அனுமதி


முஸ்லிம்களின் புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, எப்போதும் இல்லாத வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் புனித ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்க தங்கள் நாட்டு மக்களை வளைகுடா நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட வங்காளதேசத்தில் ரம்ஜான் மாதம் முழுவதும் இப்தார் விருந்து நிகழ்ச்சிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் மத நல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சமூக இடைவெளியை உறுதி செய்யும் விதமாக இப்தார் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவோ, பங்கேற்கவோ எந்தவொரு அமைப்புக்கும் மற்றும் தனிநபருக்கு அனுமதி கிடையது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரம்ஜான் பண்டிகையின் போது சிறப்பு தொழுகை நடத்த ஒரு மசூதியில் 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்ற நாட்களில் மக்கள் மசூதிகளில் கூடுவதற்கு முழுவதுமாக தடைவிதிக்கப்படுவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.