பொதுத்தேர்தலைப் பிற்போடுக - அரசிடம் TNA கோரிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகின்ற அபாயம் உள்ளமையால் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடுமாறு அரசிடம் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின்னர் இந்தக் கோரிக்கையை அறிக்கையூடாகக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று -16- விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில்,
"இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசு தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.
இவ்விடயத்தில் முற்றுமுழுதாக எமது பங்களிப்பை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
மக்களுடைய பாதுகாப்புக்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இந்த அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாகச் செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment