வெள்ளியன்று CID யில் ஆஜராக ரிஷாத்துக்கு அழைப்பு
(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளியன்று கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தலானது கறுவாத்தோட்டம் பொலிஸார் ஊடாக அனுப்பட்டுள்ளது.
ச.தொ.ச நிறுவனத்தின் ஆவணங்கள் பலவற்றை மூன்றாம் தரப்பு நபர் ஒருவரின் கைக்கு கிடைகக் செய்தமை, மின் பிறப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் மற்றும் 7,340 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணைகளுக்காக ரிஷாத் பதியுதீன் இவ்வாறு சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment