இணக்கப்பாட்டை ஏற்படுத்த, முக்கிய பங்காற்றிய இம்தியாஸ் - சஜித் பாராட்டு
ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக, சஜித் பிரேமதாசா தலைமை தாங்கி எதிர்கொள்ளும் முக்கிய தேர்தல் 2020 பாராளுமன்றத் தேர்தல் ஆகும்.
இதில் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.
அவருக்கு முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியில் சிறுபான்மை கட்சிகளும் இடம் பெற்றிருந்தமையால் அடிக்கடி முரண்பாடுகள், மனக்கசப்புக்கள் எழுந்தன.
இவற்றை சமாளிப்பதில் இம்தியாஸ் முக்கிய பங்காற்றியுள்ளார்.
சிறுபான்மை கட்சிகளிடையே பிளவுகள் அதிகரிக்காமலும், இவை ஐக்கிய மக்கள் சக்தியிடமிருந்து பிரிந்து செல்லாமலும், சிறு கட்சிகளை ஒரளவேனும் திருப்திபடுத்துவதிலும் இம்தியாஸ், முக்கிய பங்காற்றியதாக அறிய வருகிறது.
மேலும் பலவேளைகளில் கட்சிகளிடையே ஏற்பட்ட பிணக்குகள், மனக்சகப்புகளின் போது ஐக்கியத்தை ஏற்படுத்தும் பாலமாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, குருநாகல், மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில் ஏற்பட்ட பிளவுகளை நீக்குவதிலும், இம்தியாஸ் ஆற்றிய பங்களிப்புக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அவ்வாறே கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசாவும், இம்தியாஸின் கரங்களை பிடித்து அவர் ஆற்றிய பங்களிப்புக்காக தமது நன்றிகளை தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Post a Comment