Header Ads



ஓய்வூதிய கொடுப்பனவை, வீடுகளுக்கே அனுப்பிவைக்க யோசனை

அரச அலுவலர்களுக்கான வருடாந்த விழா முற்பணத்தை வழங்கவும், இருபத்து மூன்று இலட்சம் சமூர்த்திக் குடும்பங்களுக்கு ஆரம்பக் கொடுப்பனவாக 5000 ரூபாவையும், அங்கவீனர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத, காத்திருப்புப் பட்டியலில் உள்ள அங்கவீனர்களுக்கும் ஏற்புடைய கொடுப்பனவை வழங்கவும் ஜனாதிபதி மற்றும் பிரதம அமைச்சரின் அனுமதி கிடைத்துள்ளதாக விசேட ஜனாதிபதி செயலணி ஊடக ஒருங்கிணைப்புத் தலைமை அலுவலர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓய்வூதிய, முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோருக்கு ஏற்புடைய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அனுமதியின் கீழ் ஓய்வுபெற்றோர் மற்றும் முதியோரின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 2020.04.03 ஆந் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (2020.03.28) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கும் செயலணியின் பங்களிப்பு வழங்கப்படும்.

No comments

Powered by Blogger.