Header Ads



முடக்கப்பட்ட ஊருக்குள் புகுந்து நண்பர்களை வெளியே அழைத்துச் செல்ல முயன்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக முடக்கப்பட்டுள்ள களுத்துறை - பண்டாரகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டுலுகம எனும் ஊருக்குள் சட்டத்தை மீறி திருட்டுத் தனமாக உள் நுழைந்து, தனது இரு நன்பர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

21 வயதான, அட்டுலுகம பகுதிக்கு  அருகே உள்ள கிராமமொன்றில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தனிமைபப்டுத்தல் மற்றும் தொற்று நீக்கல்களுக்காக 14 நாட்கள்  தனிமைப்படுத்தல் முகாம் ஒன்றில் தங்கவைக்கப்ப்ட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 குறித்த  அட்டுலுகம கிராமத்துக்குள் உள் நுழைய வெளிச் செல்ல முடியுமான 8 வழிகளும் அடைக்கப்ப்ட்டு  அங்கு பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவமும் அதிரடிப் படையும் கூட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியின் தோட்டங்களை ஊடறுத்து அட்டுலுகமவுக்குள் நுழைந்துள்ள குறித்த இளஞன், தனது இரு நண்பர்களை அங்கிருந்து வெளியே அழைத்துக் கொண்டு தோட்டாங்கள் ஊடாகவே வெளியேறியுள்ளார். 

அவ்வாறு வெளியேரும் போது அவர்கள் பொலிஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.  இந் நிலையில் நண்பரை தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர். 

ஏனைய இருவரையும் மீண்டும் ஊருக்குள் தனிமைப்படுத்தியுள்ளனர். 

1 comment:

  1. ஏன் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?
    நாட்டுச்சட்டத்தை மதிப்பதுமிம்லை மதம் சார்ந்த இயக்கங்களின் உபதேசங்களையும் உதாசீனம் செய்வது ஒட்டு மொத்த சமூகத்தையே அவமதிக்கின்றார்களே.
    நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை அறியாமல் உள்ளனரா இவர்களும் பெற்றோரும் உறவினரும்.
    கோடரிக்காம்புகள்.

    ReplyDelete

Powered by Blogger.