சற்றுமுன் பௌசியின் வீட்டில் கூட்டம் - ஹக்கீம், றிசாத் பங்கேற்பு - பேச்சு தோல்வி
- அன்ஸிர் -
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் பௌசியின் வீட்டில் சற்றுமுன் முக்கிய கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை -16- நடைபெற்றுள்ளது.
இதில் ஹக்கீம் மற்றும் றிசாத் உள்ளிட்டவர்களுடன் அக்கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
அம்பாறையில் தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்க தீர்மானித்துள்ள நிலையில், மயில் சின்னத்தில் தனியாக களமிறங்க றிசாத் அணி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தொலைபேசி சின்னத்தில் ஹக்கீம் தரப்பினரும், றிசாத் தரப்பினரும் போட்டியிட முன்வர வேண்டுமென சஜித் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பிலேயே இரு தரப்பினருக்கும் பேச்சு நடந்துள்ளது.
பேச்சு வெற்றியளிக்காத போதிலும் இன்று திங்கட்கிழமை -16- போதிலும் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மீண்டும் சந்தித்துப் பேச இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இத்தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
Post a Comment