புத்தளத்திற்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்க, வடக்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் - பாயிஸ்
புத்தளம் மாவட்டத்தில் இருந்து இம்முறை,முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே அந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்க,ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் உதவ வேண்டும் என புத்தளம் நகரபிதா பாயிஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாராளுமன்றத் தேர்தலில் தராசு சின்னத்தின் சார்பில் போட்டியிட யாழ்ப்பாண முஸ்லிம்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. 4 பேர் தமக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
புத்தளத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த வாக்களர்கள் உள்ளனர்.
ஒற்றுமைப்படுவதன் மூலம் இந்த வாக்குகளை பெறுமதியானதாக மாற்றலாம். எனவே யாழ்ப்பாண முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும். தமக்குள் விட்டுக்கொடுப்புகளை செய்து ஓரு வேட்பாளரை முன்மொழிந்தால் ஆரோக்கியமானது.
பிரிந்திருப்பதாலும், தமக்கு மாத்திரம்தான் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்க வேண்டுமென பிடிவாதம் பிடிப்பதாலும் வாக்குகள் சிதறிப் போகுமே தவிர,எந்தப் பயனும் ஏற்படாது என்பதையும் இவர்கள் புரிய வேண்டுமெனவும் பாயிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
மக்களை அணுகுதல் ஒருபுறம் இருக்க நட்ப்புக்குரிய பாயிஸ் அவர்களும் றிசாட் பதிதியூன் அவர்களும் பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதல்லவா முறை?
ReplyDelete