ஜனாஸாக்கள் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுப்பேன் - இராணுவத் தளபதி அறிவிப்பு
முஸ்லிம்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால், அவர்களுடைய உடலை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய, தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாக, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை, 31 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் நடந்த, முஸ்லிம் தரப்புடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்புச் செய்தல், இணைந்து செயற்படல், இதுபற்றி அறிவுறுத்தல்களை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனாவினால் முஸ்லிம்கள் எவரேனும் மரணித்தால், அவர்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு, தம்மால் முடிந்த உதவிகளை செய்வதாகவும், இது தமது பணி அல்ல என்றபோதிலும், உரிய தரப்பினருடன் தாம் இதுபற்றி கலந்துரையாடுவதாகவும் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
தனது ஜனாஸா எரிக்கப்படலாம் என்ற பயத்தில் தனக்கு ஏற்பட்ட தொற்றுக்கான அறிகுறியை மறைக்கும் நிலைக்கு மக்கள் தள் ளப்படலாம். இதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
ReplyDeleteReally, Muslims want their dead body has to bury according to Islamic rites. If its needed not only 8 feet deep even 100 feet can allocate even in private land. Authority must consider it in terms of locan and WHO Ordinance.
ReplyDelete