Header Ads



தமிழ் பேசும் மாணவர்களுக்கான, இலத்திரனியல் கற்கை இணையத்தளம் அறிமுகம்


இலங்கை தமிழ் பேசும் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான புதுமை படைக்கும் இலத்திரனியல் கற்கை இணையத்தளம் அறிமுகம்.

eTeacher இணையத்தளமானது மாணவர்களினை இணையத்தினூடாக இணைத்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு இலத்திரனியல் இணையத்தளமாகும்.

இவ் இணையத்தளத்தினூடாக ஆரம்பக்கல்வி, இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்காகவும், அரசாங்க போட்டி பரீட்சாத்திகள் மற்றும் ஏனைய தொழில்சார் கற்கையாளர்களுக்குமாக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்கால மாணவர்களின் சாவல்களுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது இதனோடு இணைந்து இணைய வழி கற்கை நெறி, வினாவங்கி, நேரலை வகுப்பறை, மின் நூலகம் போன்ற சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ் இணையத்தளத்தினூடாக இணைந்து கொண்டு உலகத்தில் எந்தவொரு மூலையிலிருந்து ஒரு மாணவன் கற்கும் அதேவேளை ஒரு ஆசிரியராக கற்பித்தலினை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு ஆசிரியராக வீட்டில் இருந்தவாறே eteacherlk.com இணையத்தளத்தினூடாக பாடநெறிகளை வழங்கி மேலதிக வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் ஒரு சிறந்த வழியாகும். 

எங்களோடு இணைந்து கொள்ள : www.eteacherlk.com

1 comment:

Powered by Blogger.