அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனாவா..?
கொரோனா தொடர்பில் செய்தியாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலளிக்காமல் சென்றுள்ளமை அனைவரிடத்திலும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தனது சட்ட ஆலோசகர் ஒருவரை சந்தித்து கைலாகு கொடுத்தது மாத்திரமின்றி, பிரிதொரு ஆலோசகருடன் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
குறித்த இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவரை சந்தித்துள்ளனர் என பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காலம் என்ற சந்தேகத்தின் பேரில் செய்தியாளர்கள் இந்த கேள்வியினை முன்வைத்துள்ளனர்.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி பதிலளிக்காமல் சென்றுள்ளமை அனைவருக்கும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய வௌ்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் Stephanie Grisham, அமெரிக்க ஜனாதிபதிக்கு இதுவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அது தொடர்பில் வௌ்ளை மாளிகையுடன் கலந்துரையாடிதன் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment