பலகத்துறையிலும், மாளிகாவத்தையிலும் அடக்கம் செய்யவதற்கு தயாராகவிருந்த மொஹமட் ஜமாலின் ஜனாஸா
நீர்கொழும்பு - பலகத்துறையிலும், கொழும்பு - மாளிக்காவத்தை மையவாடியிலும் மொஹமட் ஜமாலின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கபுறு வெட்டப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பலகத்துறையில் கடந்த 30 வருடங்களாக வசித்துவந்த மொஹமட் ஜமால், நீர்கொழும்பு வைத்தியசாலையில் கொரோனாவினால் மரணமடைந்த நிலையில், அவரை பலகத்துறை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்வதற்காக கபுறும் தோண்டப்பட்டுள்ளது.
இரவோடு இரவாக கபுறு தோண்டும் பணியில், பலகத்துறை இளைஞர்கள் முழு வீச்சாக பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை மாளிகாவத்தை மையவாடியிலும் 2 வாரங்களுக்கு முன்னரே 3 கபுறுகள் 8 அடியில் தோண்டப்பட்டு, அங்கு யாராவது கோரோனாவினால் மரணித்தால், அவர்களை நல்லடக்கம் செய்வதற்காக தயார் நிலையில், அந்த கபுறுகள் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் எங்காவது மொஹமட் ஜமாலின் ஜனாஸா, நல்லடக்கம் செய்யப்பட வேண்டுமென இவ்விவகாரத்தில் ஆர்வம் கொண்ட பல்வேறு தரப்பினரும் இறுதிவரை முயன்றனர்.
எனினும் இறுதியில் அந்த அத்தனை முயற்சிகளும் தோல்வியடைந்து, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, மேலான சுவனத்தை வழங்குவாயாக...!
பிற்குறிப்பு - மேலே உள்ள படம் பலகத்துறை மையவடியில் 30.03.2020 அன்று தோண்டப்பட்ட கபுறு ஆகும்.
பிற்குறிப்பு - மேலே உள்ள படம் பலகத்துறை மையவடியில் 30.03.2020 அன்று தோண்டப்பட்ட கபுறு ஆகும்.
ACJU should take this incident to the notice of President Gota. Govt authorities have said anyone who wants to bury the dead can do so within 24 hours.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். கேட்கவே மனம் பதை பதைக்கிறது. எரிப்பதை விட புதைப்பதே சிறந்தது என உலக நாடுகளே செய்யும்போது இங்கு மட்டும் ஏன் இந்த வேற்றுமை. இதை வேணுமென்றே செய்திருந்தால் சம்பந்த பட்டவர்களுக்கும், இது தொடர்பில் உரிய கவனமெடுத்து தடுக்க வாய்ப்பிருந்தும் மௌனியாய் இருந்தவர்களுக்கும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.
ReplyDeleteWE HAVE FAILED and FAILED BADLY. Now no point in coming out with excuses. Our so called Religious and Political leadership should have taken PROACTIVE action to address this issue. All of these people are USELESS. No leadership for our community.
ReplyDeleteOh Muslims, please make a note of these so called LEADERS
Where is our So called Muslim leaders and other so called Putthijeewihal?
ReplyDeleteஇதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு தொடரப்பட்ட வேண்டும்.
ReplyDelete