நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை - பதற்றமடைய தேவையில்லை
அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் போதுமான அளவு எரிபொருள் இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் இது தொடர்பில் பதற்றமடைய தேவையில்லை எனவும் எரிபொருள் உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் திங்கட்கிழமையானது அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment