பாராளுமன்ற அதிகாரத்தை, கைப்பற்ற எதிர்பார்த்துள்ளேன் - ஞானசாரரர்
கொரோனா வைரஸால் நாட்டு மக்கள் அச்சத்தில் இருக்கும் நேரத்தில் சிவனொளிபாத மலைக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்கு ஏராளமான மக்கள் வருவதாக கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கை உலகின் பாதுகாப்பான தீவு என்றும், கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியாமை குறித்து அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் விசேட விடுமுறை மற்றும் வீட்டில் இருந்தவாறு பணியாற்றுவதற்கான வாரத்தை அறிவித்துள்ள நிலையில் இந்த அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
“நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை மட்டுமே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அரசியல் செயற்பாடு குறித்து தனக்கு எந்த வாதமும் இல்லை என்றாலும், நாட்டின் சட்டங்களை அவரால் தனியாக உருவாக்க முடியாது.
நாட்டின் அனைத்து தேசிய சக்திகளையும் இணைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, அத்துரலிய ரத்தன தேரர் தலைமையில் “எங்கள் மக்கள் சக்தி” கட்சி உருவாக்கப்பட்டது.
எவ்வாறெனினும் அந்த கட்சி கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகல மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Do not make this sacred place of parliament ugly and dirty with your bad mouth., Sri Lanka has got good people to contest election. That is why your domination is turned down. you will not get event 100 votes this time.
ReplyDeleteBUT NANASARAS PATNER CHAMPIKA
ReplyDeleteIS WITH SAJITH. HAKEEM, RISHAD
ALSO WITH CHAMPIKA.
அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் நீங்களும் ஆட்சியாளர் ஆகலாம்.ஒரு காலம் வரும் ,அக்காலத்தில் ஆட்சியாளர்கள் உங்களது வரிசையில் (தகுதியற்றவராக) இருப்பார்கள் என்பது நபி வாக்கு.
ReplyDeleteஎனவே நீங்களும் ஆட்சியாளர் ஆகலாம்.No problem.
That is thru peaple like you away from political
ReplyDelete