அத்தியாவசிய தேவைகள் குறித்து அலரிமாளிகையிலிருந்து நேரடி கண்காணிப்பு : தொலைபேசி இலக்கங்கள் இணைப்பு
(எம்.மனோசித்ரா)
அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை கண்காணித்தல் என்பன அலரி மாளிகையினால் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பில் நேரடியாக தொடர்புகளைப் பேணுவதற்கு பிரதமர் அலுவலகத்தினால் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 011-4354854 மற்றும் 011-4733600 என்ற பொது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நேரடியாக தொடர்பு கொள்வதற்கு 011-3456200, 011-3456201, 011-3456202, 011-3456203 மற்றும் 011-3456204 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ள முடியும்.
தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமின்றி 011-2333066 மற்றும் 011-4354882 என்ற பெக்ஸ் இலக்கமும் ptf@pmoffice.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment