அவனவன் முஸ்லிம்களே என, சொல்ல வருவதை தவிர்க்க வேண்டும்
கொரோனா காரணமாக அனைவரும் வீட்டில் தங்கியிருப்பது கடமை. ஆனால் சில முஸ்லிம் மேதாவிகள் இனத்தை இழுத்து முஸ்லிம்களே. வீட்டில் இருங்கள் என சொல்வது மிகப்பெரிய தவறாகும்.
சிங்கள மக்கள் யாரும் சிங்கள மக்களே வீட்டில் இருங்கள் என்றோ, தமிழ் மக்கள் தமிழ் மக்களே என விழித்து சொல்வதை நான் காணவில்லை. ஆகவே முஸ்லிம்களுக்கு மட்டும் என புத்திமதி சொல்ல வருவது கண்டிக்கத்தக்கதாகும்
கொரோனா பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகும். இன்று வரை உலகில் இந்நோயால் இறந்தோர் 98 வீதம் முஸ்லிம் அல்லாதவர்கள்.
இலங்கையில் ஊரடங்கை மீறியதால் கைது செய்யப்பட்டோர் சுமார் எட்டாயிரம் பேர். இவர்களில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்ததா?
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கூட இது பற்றிய தகவலை பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு தரவில்லை. இந்த நிலையில் முஸ்லிம்கள் மட்டுமே ஊரடங்கை மீறுவதாக நினைத்துக்கொண்டு அவனவன் முஸ்லிம்களே என சொல்ல வருவதை இனியாவது தவிர்க்க வேண்டும். இவ்வாறு எழுதுவோருக்கும் பேசுவோருக்கும் எதிராக சமூகம் பேச வேண்டும்.
அனைத்து இலங்கையரும் வீட்டில் இருப்போம். முடிந்தளவு அரசின் உத்தரவுகளை பின்பற்றுவோம்.
- முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்.
ஸ்ரீ லங்கா உலமா கட்சி
Agree with your opinion in way. It is too much pressure on Muslims with exagared blams.
ReplyDeleteYes appreciated
ReplyDeletePerfect.100% true
ReplyDeletevery good message
ReplyDeleteமுஸ்லிம்கள் மாறினாலும், இஸ்லாமோபியா முன்னெடுக்கப்படும்...
ReplyDeleteஎனவே, இஸ்லாமோபியா வரைவிலக்கணப்படி முஸ்லிம்கள் ஏனைய உயிரினங்களின் "கொரோனா" !