கொரோனா தொடர்பில், ஆதாரமற்ற தகவல்களை நம்பவேண்டாம்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படும் ஆதாரமற்ற தகவல்களை நம்பவேண்டாம் என சுகாதார மற்றும் வைத்தியத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலை உட்பட இம்மாவட்டத்தின் பல வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அரச வைத்தியசாலை நிர்வாகங்களிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்கள் எவரும் இல்லை எனவும் சமூகவலைத் தளங்களில் தெரிவிக்கப்படும் ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் இந்நிர்வாகங்கள் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளன.
Post a Comment