Header Ads



பாரம்பரிய மூலிகைகளை வாங்கி உபயோகிப்பதில் மக்கள் ஆர்வம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கொரோனா வைரஸ் அச்சத்திலிருந்து தங்களுக்கு முற்பாதுகாப்புத் தேடிக் கொள்வதற்காக பாரம்பரிய ஆயுள்வேத மூலிகைகளையும் ஒளடதங்களையும் தேடிப் பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக ஆயுள் வேத மூலிகை மருந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பெருங்காயம், மஞ்சள், கருஞ்சீரகம், கருஞ்சீரக எண்ணெய் உள்ளிட்ட இத்தியாதி ஆயுள்வேத மூலிகைகள் அதிகளவில் விற்பனையாவதாகவும் சில இடங்களில் இப்படிப்பட்ட மூலிகைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இரசாயனம் கலக்காத வகையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி தானிய உணவு வகைகளைப் பெற்று நுகர்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இரசாயனங்கள் கலக்காது இயற்கையாக  உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி தானிய உற்பத்திப் பொருட்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதாக அதன் நுகர்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.