Header Ads



பாலமுருகன் குறித்த வீடியோ, மிரட்டி வாங்கியது - யாரும் நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம்..

அய்யா வழி பால முருகன் குறித்து காவல்துறை, இந்துத்துவா சேர்ந்து திட்டமிட்டு வெளியிட்டுள்ள வீடியோ யாரும் நம்பாதீர்கள்.

உண்மை என்னவெனில் முழு விளக்கம்..

அய்யா வழி பாலமுருகன் பேசியதாக ஒரு வீடியோ வெளியே வந்து அதை முஸ்லிம்கள் சிலர் நம்பி அவரை கொச்சை படுத்தும் விதத்தில் கருத்து போட்டு வருகிறார்கள்..

அய்யாவழி பாலமுருகன் அவர்கள் கொடைக்கானலில் பொது கூட்டம் முடித்து அங்கே இருந்து கிளம்பி திண்டுக்கல் வரும் வழியில் 16 பேர் கொண்ட காவல்துறை கும்பல் வழி மறித்து கைது செய்திருக்கிறது கைது செய்து கோவைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பால முருகன் இடத்தில் பல மிரட்டல்கள் விடுத்து காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கே உண்டான பாணியில் சில வேலை செய்து திண்டுக்கல்லில் வைத்து ஒரு ரூமில் பின்னால் காவி துணி கட்டி வீடியோ எடுத்து உள்ளனர் அதில் பாலமுருகன் அவர்கள் இனி காவி துண்டு உடன் எங்கேயும் பேச கூடாது காசு தான் வாங்கி முஸ்லிம்கள் கூட்டத்தில் பேசினேன் என பல மிரட்டல்கள் இந்துத்துவா சக்திகள் அழுத்தம் என பாலமுருகனை பல சித்ரவதை செய்த பின்னர் அந்த வீடியோவில் பேச வைக்க பட்டுள்ளார்..

அந்த வீடியோவில் அய்யாவழி பாலமுருகன் அவர்கள் நான் நெல்லையிலிருந்து பேசுகிறேன் என்று என்று சொல்கிறார் அதிலிருந்தே தெரிகிறது இது அருமையான செட்டிங்.....

மேலும் காலை அய்யா வழி பால முருகன் அவர்களை கைது செய்து கோவை கொண்டு வந்து உள்ள செய்திகள் வந்த உடனே கோவை இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக காவல்துறை அதிகாரிகள் இடத்தில் பல நெருக்கடி கொடுக்கப்படும் என தெரிந்து தான் காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தியது..

உடனே சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடந்து இப்போது அய்யா வழி பால முருகன் அவர்கள் இடத்தில் வழக்கறிஞர் குழு பேசி கொண்டு உள்ளது..

இந்த வீடியோ குறித்து மதியம் 1 மணிக்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக அய்யா வழி பால முருகன் அவர்களை நீதிமன்றம் முன்பு சந்திக்கும் போது என்னை மிரட்டி வாங்கினார்கள் என்னை பல கொடுமை செய்து தான் பேச வைத்தார்கள் எனக்கே இந்த நிலைமை என்றால் உங்களுக்கு ஆதரவா பேசினால் இது தான் கதி என சித்திரிக்கும் வகையில் தான் என்னை வீடியோ எடுத்தார்கள் என கூறினார்..

ஒரு போதும் நான் அப்படி பேசுபவன் இல்லை முஸ்லிம்கள் மத்தியில் என்னை இப்படி சொல்ல வேண்டும் என்பதற்காக வீடியோ எடுத்து உள்ளார்கள் என கூறி விட்டு வேதனை பட்டுள்ளார்..

இதற்கு சாட்சி கோவை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள்..

வீடியோ காவல்துறை எடுத்து அதை இங்கே உள்ள முனாபிக்குள் மற்றும் இந்துத்துவா சக்திகள் இடத்தில் காவல்துறை கொடுத்து போட வைத்து உள்ளது..

வீடியோ என்பது காவல்துறை மிரட்டி எடுத்தது..

அய்யா வழி பால முருகன் அவர்கள் விடுதலைக்கு குரல் கொடுங்கள் விடுதலை ஆனாலும் துணை நிற்போம் செய்திகளை ஆராய்ந்து பேசுங்கள் பரப்புங்கள்..

தகவல்,: கோவையில் அய்யா வழி பால முருகன் அவர்களை நேரில் பார்த்த சகோதரர்கள்

No comments

Powered by Blogger.