கொரோனா அச்சம் - போக்குவரத்துச் சேவைகள் பாதிப்பு
-எஸ்.குகன்
கொரோனா அச்சம் காரணமாக, யாழ்ப்பாணம் – கொழும்புக்கிடையேயான போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரேனா வைரஸ் அறிகுறியை அடுத்து, பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தனியார் பஸ்களில் குறைந்த பயணிகள் பயணிப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
அதனை விட, வெளிமாவட்டங்களுக்கு பஸ்லில் செல்வோரின் எண்ணிகையும் குறைவடைந்துள்ளது.
மக்கள் பொதுப்போக்குவரத்தைத் தவிர்த்துள்ளமையாலேயே, இந்தப் பதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment