கொரோனாவுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டம்: சீனாவில் நாய், பூனை, வெளவால்கள் விற்பனை அமோகம்
கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில் சீன மாமிச சந்தைகளில் பாம்பு, நாய், வெளவால்கள் என விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளன.
சீனாவில் ஹூபே மாகாணத்தில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் வுஹான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வுஹான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் சீன அரசால் தடை விதிக்கப்பட்டது.
வுஹான் உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இவர் போன்ற பலருக்கு கொரோனா பாதிப்பு ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டதால், அந்த முதல் நபர் யார் என்பது தொடர்பில் சீன அரசாங்கம் ரகசியம் காத்து வருகிறது.
இருப்பினும் வுஹான் முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் பல ஆயிரம் பேர் சாவுக்கு இந்த உணவு சந்தையில் இருங்து பரவிய கிருமியே காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது 2 மாத ஊரடங்கிற்கு பிறகு சீனாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது.
ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது எனவும் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக குயிலினில் அமைந்துள்ள உட்புற சந்தைக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டிருந்தனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் தொற்றுநோயைத் தொடங்கிய வகையிலான மோசமான உணவு சந்தைகளை மீண்டும் திறப்பதன் மூலம் கொரோனா வைரஸுக்கு எதிரான வெற்றியை சீனா கொண்டாடியது.
இதனிடையே எதிர்கால பரவலைத் தடுக்க சுகாதாரத் தரங்களை பேணி காப்பதற்கான வெளிப்படையான முயற்சி எதுவுமில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வழக்கமாக அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகளும், நாய், பூனை, வெளவால்கள் உள்ளிட்டவைகளின் மாமிசமும் அமோகமாக விறபனை செய்யப்பட்டுள்ளது.
கொஞ்ஞமும் ரோசம் கிடையாது.
ReplyDelete