Header Ads



சிறுபான்மைக் கட்சிகளின் ஒற்றுமையில், புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

எதிர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில்  காத்திரமானதும் தூரநோக்குடனும் பயணிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

எமது உரிமையுடனான இருப்புத்தொடர்பாகவும் அதனோடு தொடர்பான ஏனைய அன்றாட அத்தியாவசிய தேவைகள் தொடர்பாகவும் நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இவ்வாறான  சந்தர்ப்பத்தில் எமது யாழ், - கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களுடைய வாக்கு வங்கி பன்னிரண்டாயிரம் புத்தளம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு உறுதுணையாக உள்ளது.

இதே போன்ற  வாக்கு வங்கித்தொகையே வன்னி மாவட்ட மக்களிடத்திலும்  உள்ளது.

எனவே  நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் பெரியபள்ளிவாயல், சிவில் அமைப்புக்கள், ஏனைய சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரனையோடும் புத்தளம் மாவட்ட மக்களின் பேராதரவோடும் இழந்து நிற்கின்ற பாராளுமன்றப் பிரதிநிதிகளை வென்றெடுக்கும் அரசியல் களம் அவசரமாக அமைக்கப்படல் வேண்டிய தேவையுள்ளதை தெளிவுபடுத்துகின்றோம்.

எமது நிலைப்பாடுகளையும் அபிலாசைகளையும் உள்வாங்கிக்கொண்டும், முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை வெற்றி பெறக்கூடிய அரசியல் செயற்பாடுகளை ஆதரித்து வாக்களிப்பது இன்றியமையாத விடயமாக உள்ளது.

எனவே இது விடயமாக கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சிறுபான்மைக் கட்சியினருக்கு உள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒற்றுமை   ஏற்படாமல்  பிரிந்து சென்றால்  இவ்வமைப்பு யாழ் - கிளிநொச்சி மக்களின் நலன் சார்ந்த அரசியல் விடயங்களில்  முன்னெடுக்கும் அரசியல்  நகர்வுகளை நோக்கி பயணிக்க நேரிடலாம்.  இது காலத்தின் தேவைப்பாடாகவும் உள்ளது.

எனவே புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான காத்திரமானதும்,  தூரநோக்கானதுமான தீர்மானங்களை  சிறுபான்மைக்கட்சிகள்  உடன் செயற்பட்டு  எடுக்கவேண்டும்.

அத்தோடு பிரதிநிதித்துவத்தை பெற தேவையுள்ளதை உணர்ந்து  கட்சி தலைமைகள், கட்சியின் பிதேச  வேட்பாளர்கள்  விட்டுக்கொடுப்புக்களைச் செய்து,  ஒற்றுமையுடன்    செயல்படுமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

கட்சிகளுகக்கிடையிலான காழ்புணர்சிகளை புறந்தள்ளி, பகுதிவாத, பிரதசேவாத, வகுப்புவாதங்களுக்கு அப்பால், கடந்தகால நிகழ்வுகளின் விடயங்களை வைத்து தர்க்கிக்காமல், பொதுவான நியதிகளின் அடிப்படையில் ஏகமனதாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக சிந்தித்து இறுதித்தீர்வுக்காக முன்வருமாறு சம்மந்தப்பட்ட கட்சிசார்பான யாவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இத்தருணமாவது நாங்கள் யாவரும் ஒத்துழைத்து, ஒன்றுபட்டு இப்புத்தளம் மண்ணின் இருப்புக்களை காக்க வாருங்கள்.  என அன்பான  உறவுகள் யாவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

- 'புத்தளம் வாழ் 
யாழ் - கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட
சிவில் சம்மேளனம்'.-

1 comment:

Powered by Blogger.