Header Ads



கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான, நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 01, புதன் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 02.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.


மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.03.31

No comments

Powered by Blogger.