Header Ads



நாடு திரும்பிய யுவதிகளைத் தேடி வலைவீச்சு

- நீலமேகம் பிரசாந்த் -

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்று நாடு திரும்பியுள்ள யுவதிகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கையில், பொலிஸார், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 10 யுவதிகள் இனங்காணப்பட்டனர் என்றும் அவர்கள், கட்டார், மலேசியா, மாலைத்தீவு, ஜேர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களெனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வைத்தியப் பரிசோதனையின் பின்னர் அவர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

14 நாள்களில் அவர்கள், வெளியில் நடமாடித் திரிவார்களாயின் அவர்களுக்கு எதிராக சட்டநவடிக்கை எடுக்கப்படும் என்று, கொட்டகலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.