Header Ads



றிசாத்துடன் மீண்டும் இணைந்த ஹமீட், அம்பாறையில் மயில் சின்னத்தில் தலைமை வேட்பாளராக போட்டி


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ். சுபைதீன் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமை காரணமாக, எதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, அதன் மயில் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் நிலை தோன்றியிருந்தது.

இந்த நிலையில், வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் கடந்த வியாழக்கிழமையன்று தமக்கிடையில் சமரசமொன்றினை ஏற்படுத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினையும் செய்து கொண்டமையினை அடுத்து, மயில் சின்னத்தில் மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவதில் இருந்து வந்த சிக்கல் விலகியுள்ளது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அணிக்கு தலைமை வேட்பாளராக, கல்முனையைச் சேர்ந்த வை.எல்.எஸ். ஹமீட் நியமிக்கப்படவுள்ளார் எனவும், அந்தக் கட்சி தரப்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கல்முனையைச் சேர்ந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கே.எம். ஜவாத்தும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

– முன்ஸிப் –

1 comment:

Powered by Blogger.