Header Ads



முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து கேட்க முடியுமானால், ஏன் தற்போது அரசாங்கத்தினூடக கேட்கமுடியாது..?

2010 மற்றும் 2015ம் ஆண்டிலே முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து தேர்தல் கேட்க முடியுமானால் ஏன் 2020ம் ஆண்டில் முழுமையான தமிழ் வேட்பாளர்கள் இணைந்த அரசாங்கத்தில் தேர்தல் கேட்கமுடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வியெழுப்பினார்.

எதிர்வரும் பொது தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வேட்பு மனுதாக்கல் செய்யு நடவடிக்கையின்போது பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் உட்பட வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு வேட்பாளர்கள் தமிழ் வேட்பாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்,

கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒருபொதுச்சின்னத்தில் போட்டியிட ஒன்றிணைய வேண்டும் என்ற பேச்சுவார்த்தையை கிழக்குத் தமிழர் ஒன்றியம், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு முன்னெடுத்தது.

இதற்கு யார் வந்தார்கள் தமிழரசுக்கட்சி வந்ததா? தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிவந்ததா?

ஏன் வரவில்லை? இங்குள்ள பிரச்சினை கிழக்கை மீட்போம் மீட்போம் எனக் கூறிக்கொண்டு தமது கட்சியியை வளர்க்கும் செயற்பாட்டையே செய்கின்றனர் .

நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லாக் கட்சிகளின் கதவுகளையும் தட்டியது.

அனைத்துத் தமிழ் கட்சிகளும் சேர்ந்து பொதுச்சின்னத்தில் கேளுங்கள் அல்லது மொட்டுச்சின்னத்தில் போட்டியிடுங்கள் என ஏன் கேட்க முடியாது.

கடந்த காலத்தில் 2010ம் மற்றும் 2015ம் ஆண்டிலே முஸ்லிம் அரசியல் வாதிகளுடன் சேர்ந்து கேட்க முடியுமானால் ஏன் 2020ம் ஆண்டிலே தற்போது அரசாங்கத்தினூடக நியமிக்கும் போது கேட்கமுடியாது.

இவாறானா வினாவினை கிழக்கு மாகாணத்தில் கிழக்கை மீட்போம் என கூறும் கட்சிகளிடம் கேட்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.