Header Ads



தகனம் செய்யப்பட்ட எனது, தந்தையின் படங்களை பகிராதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்

கொரோனோ தொற்று ஏற்பட்டு மரணித்ததாக கூறப்படும், மொஹமட் ஜமால் தகனம் செய்யப்படும் புகைப்படங்களை எக்காரணம் கொண்டும் பகிர வேண்டாமென, அவரது மகன் மொஹமட் கியாஸ் ஜமால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது குடும்பம் மிக கடும் பாதுகாப்புடன் தனிமைப்படத்தப்பட்டு மிகவும் வேதனையுற்றிருக்கும் நிலையிலும், இச்செய்தியை எழுதும், இந்நேரம் வரை (11.30) அவரது மனைவிக்கு தனது, கணவர் தகனம் செய்யப்பட்ட தகவல் இதுவரை  அறிவிக்கப்படவில்லை.

மேலும் வழமையாக ஜனாஸா புதைக்கப்படும் நிலையில், தமது தந்தையின் ஜனாஸா மாத்திரம் தகனம் செய்யப்படும் காட்சியை பார்க்கும் சக்தி தமது தங்கைளுக்கோ, அல்லது தம்பிகளுக்கோ இல்லை என்றபடியால் தயவுசெய்து அந்தப் படங்களை பகிர வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களை பகிர்ந்த எவராயினும், தமது குடும்பத்தில் இப்படி ஓரு வேதனைச் சம்பவம் நடத்திருந்தால், அதனை பகிந்திருப்பார்களா எனவும் மகன் கியாஸ் மிகுந்த மனவேதனைப்பட்டு அழுதபடி எம்மிடம் தெரிவித்தார்

2 comments:

  1. Hope Government also will restrict taking pictures and videos to consider the respect and feelings of loving family members.

    In All the cases.. we expect both the action of government and also people from not sharing such.

    May Allah protect all our beloved brothers and sisters from such hard situation.

    May Allah reward this family for their SABR.

    ReplyDelete

Powered by Blogger.