என்னைக் கைதுசெய்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவது, என்றால் 5 வருடம் சிறையில் இருக்கத் தயார்
தனக்கு சிறை வாழ்க்கைப் புதிதல்ல எனத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, தன்னைக் கைது செய்து, கொரோனாவைக் கட்டுப்படுத்துவது என்றால் 2 வருடம் இல்லை 5 வருடம் என்றாலும் சிறையில் இருக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.
இன்று (18) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
எனவே தன்னை கைதுசெய்து கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் உறுதிப்படுத்துவார்களாயின், நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக தான் சிறைச் சோறு உண்ண தயார் என்றும் தெரிவித்தார்.
எமது கையில் தவறொன்று நடந்து விட்டது. ஆனால் நேற்று வெளியாகியுள்ள பத்திரிகைகளில் கொரோனா தொற்றாளர்கள் குறித்து, ஜனாதிபதியும் , சுகாதார தரப்பினரும் மாறுப்பட்ட கருத்துகளை முன்வைக்கின்றனர்.
எனவே இவ்வாறு மாறுப்பட்ட எண்ணிக்கையினை முன்வைக்கும் ஜனாதிபதியை சிறையில் அடைப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியதுடன், எமக்கு தவறு நேர்ந்தது போன்றே, ஜனாதிபதிக்கும் தவறு நேர்ந்திருக்கலாம் என்றார்.
Post a Comment