கொரோனா பாதிப்பால் மரண எண்ணிக்கை 40,000 த்தைத் தாண்டியது
சீனாவில் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. உலக அளவில் 190க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா நாடுகள் கொரோனாவால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000-த்தைத் தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,400-த்தைத் தாண்டியுள்ளது. ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,200-த்தைத் தாண்டியுள்ளது.
சீனாவில் இதுவரையில் 3,300 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துவருகிறது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரையில் 175,669 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள இத்தாலியில் 105,792 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
ஸ்பெயினில் 94,417 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். ஈரானில் 44,605 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment