Header Ads



உலமாக்கள் முன் முடிவின்றி முடிந்த, ஹக்கீம் - ரிசாத் 2 ஆவது சுற்றுப் பேச்சு


-  அன்ஸிர் -

அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து, இன்று திங்கட்கிழமை -16- மாலை மூத்த முஸ்லிம் அரசியல்வாதி பௌசியின் வீட்டில், நடந்த 2 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை கூட்டம் முடிவின்றி முடிந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோருடன், அவர்கள் கட்சி சார்பிலான பிரதிநிதிகளும் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தை இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் முஸ்லிம் காங்கிரஸ், போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம் மக்கள் காங்கிரஸ், மயில் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்து அதில் விடாப்பிடியாகவும் உள்ளது.

இன்றைய 2 ஆவது சுற்றுப் பேச்சில் வை.எல்.எஸ். ஹமீட் மயில் சின்னத்தில் தமது கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், தமது கட்சி சஜித்தின் கீழ் மயில் சின்னத்தில் போட்டியிட விருப்பமின்மையயும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து பேச்சு முடிவின்றி முடிந்துள்ளது.

இந்த பேச்சுக்ளில் அம்பாறை மாவட்ட உலமாக்கள் 6 பேர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. உலகமே கொரோனாவுக்கு மடிந்து கொண்டிருக்க இவர்களுக்கோ பதவி வெறி

    ReplyDelete
  2. சந்தர்ப்பவாதிகள்.
    சேருவதும் பிரிவதும்.
    இவர்களால் சமூகம் அடைந்த தீமைகள்தான் அதிகம்.

    ReplyDelete
  3. BOTH ARE VERY RICH MAN
    BOTH ARE VERY GOOD BUSSINESS DOING 5YEARS TERMS IN PARLIMENT PERIOD

    ReplyDelete

Powered by Blogger.